மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி பெருவிழா 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி பெருவிழா 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி பெருவிழா 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழுப்புரம்

மேல்மலையனூர்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான விழா வருகிற 18-ந்தேதி(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி அன்று காலையில் கோபால விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகளும். இரவு 9 மணிக்கு கொடியேற்றம், அதன் பிறகு சக்தி கரகமும் நடைபெறும். 19-ந்தேதி, காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் மயானக்கொள்ளை விழாவும், இரவு ஆண் பூதவாகனத்தில் சாமி வீதி உலாவும், 20-ந்தேதி (திங்கட்கிழமை) காலையில் தங்கநிற மரப் பல்லக்கிலும், இரவு பெண்பூத வாகனத்திலும், 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடக்கிறது.

24-ந்தேதி தேரோட்டம்

22-ந் தேதி (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேல் தீமிதி விழாவும், இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது. 23-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு யானை வாகனத்தில் சாமி வீதி உலாவும், 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு மேல் 3 மணிக்குள் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

25-ந் தேதி (சனிக்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு குதிரை வாகனத்திலும், 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தங்க நிற மரப் பல்லக்கிலும் இரவு சத்தாபரணம் என்னும் புஷ்ப பல்லக்கில் சாமி வீதிஉலாவும், 27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தீர்த்தவாரி மண்டகப்படியும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. 2-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மாலையில் சாமி வீதி உலா, இரவு கும்பப் படையல், காப்புகளைதல், கொடியிறக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story