திருக்கழுக்குன்றம், சதுரங்கப்பட்டினத்தில் மாசிமக தீர்த்தவாரி திருவிழா


திருக்கழுக்குன்றம், சதுரங்கப்பட்டினத்தில் மாசிமக தீர்த்தவாரி திருவிழா
x

திருக்கழுக்குன்றம், மாசிமக தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் மாசிமகத்தையோட்டி தாழ்க்கோவிலில் இருந்து வேதகிரிஸ்வரர் திருபுரசுந்தரி அம்மாள் புஷ்ப அலங்காரத்தில் ஏழுந்தருளி சன்னதி தெருவழியாக சங்கு தீர்த்த குளத்தை வந்தடைந்தனர்.

அதனை தொடர்ந்து சங்கு தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்களை எழுப்பியவாறு புனித நீராடினர்.

அதனை தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்றது. மேலும் பவுர்ணமி தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேதகிரீஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.

அதனை தொடர்ந்து கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கடற்கரை பகுதியில் 24-ம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

கல்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள 18 கிராமங்களில் இருந்து முக்கிய கோவில்களின் உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்ட தேரில் வாணவேடிக்கை, மேளதாலங்கள் முழங்க ஊர்வலமாக வந்து சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் வரிசையாக நிறுத்தப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் உற்சவருக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story