மதுரை ஐகோர்ட்டில் முகக்கவசம் கட்டாயம் - அமலுக்கு வந்தது


மதுரை ஐகோர்ட்டில் முகக்கவசம் கட்டாயம் - அமலுக்கு வந்தது
x

கொரோனா அதிகரிப்பால் மதுரை ஐகோர்ட்டில் முகக்கவசம் கட்டாயம் அமலுக்கு வந்தது.

சென்னை,

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தையே கொரோனா தொற்று உலுக்கி எடுத்தது. அதன் பாதிப்பு குறைந்தது. தற்போது கொரோனா மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதையடுத்து, போதுமான முன்னனெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, மத்திய அரசு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மாநில அரசும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, சுகாதாரத்துறையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் இன்று முதல் (17ம் தேதி) முகக்கவசம் அணிவது கட்டாயம் என மதுரை ஐகோர்ட்டு கூறியிருந்தது.

இந்நிலையில், கொரோனா அதிகரிப்பால் மதுரை ஐகோர்ட்டு கிளையில் முக்கவசம் கட்டாயம் அமலுக்கு வந்தது.

நீதிமன்ற பணியாளர்கள், அலுவலர்கள், வழக்கறிஞர்கள், வழக்காடிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்குகள் பட்டியிலப்படாதவர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டு உதவி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story