கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை


கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

இரணியல் அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

இரணியல் போலீஸ் சரகம் பரசேரி பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன் (வயது 62), கொத்தனார். இவருக்கு ராஜம் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மனைவி ராஜம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

மகாதேவனுக்கு மது பழக்கம் உண்டு. மேலும் வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த மகாதேவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் மனைவி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story