மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பலி


மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பலி
x

மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பலியானார்

திருச்சி

முசிறி அருகே உள்ள வீரமணிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் பாலசுப்பிரமணி (வயது 25), கொத்தனாரான இவர் நேற்று பெரியகொடுத்துரை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (55) என்பவரது வீட்டிற்கு வேலைக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் வேலை முடிந்ததும் முகம் கழுவதற்காக பாலசுப்பிரமணி மின் மோட்டார் சுவிட்சை அழுத்தியுள்ளார். அப்போது மின் ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு பாலசுப்பிரமணி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story