விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை


விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
x

பட்டுக்கோட்டை அருகே வீ்ட்டை கட்டி முடிக்க முடியாத விரக்தியில் விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை அருகே வீ்ட்டை கட்டி முடிக்க முடியாத விரக்தியில் விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.

வீடு கட்டினார்

பட்டுக்கோட்டையை அடுத்த மகிழங்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன்(வயது42). கொத்தனாரான இவர்மன்னார்குடி அருகே உள்ள தென்பறை கிராமத்தில் இடம் வாங்கி வீடு கட்டி வந்தார். ஆனால் குறித்த காலத்தில் அவர் திட்டமிட்டபடி வீட்டை கட்டி முடிக்க முடியவில்லை. வீட்டை கட்டி முடிக்க போதிய அளவு பணம் இல்லாததால் மன உளைச்சல் ஏற்பட்டு அய்யப்பன் பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

பரிதாப சாவு

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அய்யப்பனை மீ்ட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றிஅய்யப்பன் உயிரிழந்தார். இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story