தூய்மை பாரத இயக்க நிகழ்ச்சி
தூய்மை பாரத இயக்க நிகழ்ச்சி
தளி
தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளில் தூய்மை பாரத இயக்கம் தலைப்பில் பல்வேறு நிகழ்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டு இருந்தது.அதன் படி உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றி தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பூச்செடிகள் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை வகித்தார். இராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி செழியன் முன்னிலை வகித்தார். இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகி சின்னதுரை பூச்செடிகள் மற்றும் தொட்டிகளை பள்ளிக்கு வழங்கினார். பள்ளி மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில் பூச்செடிகளை நடவு செய்தனர். பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் பற்றிய விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கண்ணபிரான் செய்திருந்தார்.இதில்இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் கோகுலப்பிரியா, முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.