கடவூா் கருணாத்ரி நாதா் கோவில் மாசி தேரோட்டம்


கடவூா் கருணாத்ரி நாதா் கோவில் மாசி தேரோட்டம்
x

கடவூா் கருணாத்ரி நாதா் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரூர்

தரகம்பட்டி அருகே உள்ள கடவூரில் பிரசித்தி பெற்ற ஹோமத்து நாயகி சமேத கருணாத்ரி நாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மக திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. பின்னர் சுவாமிகள் தினமும் குதிரை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் ஹோமத்து நாயகி-கருணாத்ரி நாதர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர். இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 8-ந்தேதி மஞ்சள் நீராட்டுடன், சுவாமிகள் பல்லக்கில் வீதி உலா வந்து திருவிழா நிறைவடைகிறது.


Next Story