மதுரையில் 91.14 சதவீதம் பேர் தேர்ச்சி


மதுரையில் 91.14 சதவீதம் பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மதுரை 91.14 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

மதுரை

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மதுரை 91.14 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

பிளஸ்-1 தேர்வு

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-1 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மதுரை மாவட்டத்தில் உள்ள 322 பள்ளிகளில் பயின்ற 16 ஆயிரத்து 690 மாணவர்கள், 17 ஆயிரத்து 954 மாணவிகள் என மொத்தம் 34 ஆயிரத்து 844 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 14 ஆயிரத்து 584 மாணவர்கள், 16 ஆயிரத்து 989 மாணவிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 573 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதன்படி மாணவர்கள் 87.38 சதவீத தேர்ச்சியும், மாணவிகள் 94.63 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

91.14 சதவீத தேர்ச்சி

மேலும் பிளஸ்-1 தேர்வில் மதுரை மாவட்டத்தில் 91.14 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். இதில் அரசு பள்ளிகள் 81.94 சதவீத தேர்ச்சியும், மாநகராட்சி பள்ளிகள் 82.33 சதவீத தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.82 சதவீத தேர்ச்சியும், மெட்ரிக் பள்ளிகள் 97.79 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.

5 அரசு உதவி பெறும் பள்ளிகள், ஒரு அரசு பள்ளி, 2 கள்ளர் பள்ளிகள், 65 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 82 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story