மேலூரில் மாதா சிலை கூண்டின் கண்ணாடி உடைப்பு


மேலூரில் மாதா சிலை கூண்டின்  கண்ணாடி உடைப்பு
x

மேலூரில் மாதா சிலை கூண்டின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரை

மேலூர்,

மேலூரில் உள்ள சிவகங்கை ரோட்டில் ஆர்.சி.நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு நுழைவு வாயில் அருகே கண்ணாடி கூண்டில் அன்னை வேளாங்கண்ணி மாதா சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி கூண்டை யாரோ கல் எரிந்து தாக்கியுள்ளனர். இதில் கண்ணாடி உடைந்துள்ளது.

இதுகுறித்து பங்கு தந்தை இருதயராஜ் மேலூர் போலீசில் புகாரில் அளித்துள்ளார். இதனையடுத்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள ரகசிய கேமராக்கள் பதிவுகளை சேகரித்து யார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கிறித்துவ மக்கள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் இருதயசாமி மற்றும் மரிய ஆரோக்கியம் தலைமையில் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story