மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
நாகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
மனு கொடுக்கும் போராட்டம்
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் லதா தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் சுஜாதா முன்னிலை வகித்தார். இதில் அகில இந்திய துணை செயலாளர் சுகந்தி கலந்து கொண்டு பேசினார். நிலுவையில் உள்ள 100 நாள் வேலை சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். 100 நாள் வேலையை ஆன்லைனில் பதிவு செய்யக்கூடாது. அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலையை தொடங்க வேண்டும்.
முதியோர் உதவித்தொகை
60 வயதான அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும்.
விதவை, முதிர்கன்னிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு சென்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.