மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டம்


மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டம்
x
தினத்தந்தி 11 July 2022 1:02 AM IST (Updated: 11 July 2022 1:03 AM IST)
t-max-icont-min-icon

மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டம்

தஞ்சாவூர்

தஞ்சை ரெயிலடியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் வசந்தி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் மாலதி, மாநிலக்குழு உறுப்பினர் கலைச்செல்வி, மாவட்ட நிர்வாகி வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின்போது, கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அதை சுற்றி வந்து பெண்கள் கும்மிஅடித்தும், ஒப்பாரியும் வைத்தனர்.

போராட்டத்தில், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டிப்பதுடன் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


Next Story