முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவில் ஆனி தேரோட்டம்
முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவில் ஆனி தேேராட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிங்கம்புணரி,
முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவில் ஆனி தேேராட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மீனாட்சி சொக்கநாதர் கோவில்
சிங்கம்புணரி அருகே முறையூரில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3-ந்தேதி ஆனி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர்.
8-ந்தேதி அன்று கழுவன் திருவிழா நடைபெற்றது. ெதாடர்ந்து நேற்று முன்தினம் இரவு மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து புறப்பட்ட சுவாமி கோவிலில் நான்கு ரத வீதியில் வலம் வந்து திருக்கல்யாண மேடையில் பக்தர்களுக்கு முன் எழுந்தருளினார். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கெட்டிமேளம் வழங்க சுந்தரேஸ்வரர் மற்றும் அன்னை மீனாட்சி வேடமணிந்த சிவாச்சாரியார்கள் மாலை மாற்றிக் கொண்டு திருக்கல்யாண வைபோக விழாவை நடத்தி வைத்தனர். சுவாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
தேரோட்டம்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று மாலை 6 மணியளவில் முதல் தேரில் விநாயகரும், 2-வது தேரில் முருகப்பெருமானும், 3-வது தேரில் சண்டிகேசுவரரும், பெரிய தேரில் பிரியாவிடை சொக்கநாதரும், 2-வது பெரிய தேரில் அன்னை மீனாட்சி அம்மனும் எழுந்தருளினார்கள்.
அதனை தொடர்ந்து தேவஸ்தான கண்காணிப்பாளர் தண்ணாயிரம் கவுரவ கண்காணிப்பாளர் மாணிக்கம் மற்றும் சாமியாடிகள், கிராமத்தார்கள், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள். கிராம பெரியவர்கள் முன்னிலையில் கொடி அசைக்கப்பட்டு திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வந்தது கண்கொள்ள காட்சியாக இருந்தது.5 தேர்களும் நான்கு ரத வீதியில் உலா வந்து இரவு 7.15 மணியளவில் நிலையை அடைந்தது.
நேர்த்திக்கடன்
தேர் நிலையை அடைந்ததும் பக்தர்கள் வாழைப்பழங்கள் வீசியும் தேரோடு வீதிகளில் தேங்காய்கள் ஆயிரக்கணக்கில் உடைத்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இன்று (செவ்வாய்க்கிழமை) பஞ்சமூர்த்தி புறப்பாடு மற்றும் தீர்த்த உற்சவத்துடன் மீனாட்சி சொக்கநாதர் கோவில் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் முறையூர் கிராம மக்கள் செய்திருந்தார்கள்.