மாவடிபண்ணைமுத்தாரம்மன் கோவில் கொடைவிழா தொடங்கியது
மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் கொடைவிழா தொடங்கியது
தென்திருப்பேரை:
மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் ஆவணி கொடைவிழா நேற்று கால்நாட்டுடன் தொடங்கியது. முன்னதாக காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 7.45 மணிக்கு கால்நாட்டு நிகழ்ச்சி தொடங்கியது. காலை 8.15 மணிக்கு கோவில் முன்பு பூஜைகள் செய்து கால்நாட்டப்பட்டது. இதை தொடர்ந்து கொடைவிழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு காலை, மாலையில் சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்சியாக வருகிற 12-ந் தேதி காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்தலும், மதியம் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். காலை, மதியம் மற்றும் இரவு அன்னதானம் நடைபெறும். இரவு 8 மணிக்கு அம்மனுக்கு முளைப்பாரி எடுத்தல் மற்றும் கரகாட்டம் நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு வாணவேடிக்கை மற்றும் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதிஉலா நடைபெறும். வருகிற 13-ந்தேதி அம்மனுக்கு பொங்கலிடுதல் மற்றும் தீர்த்தவாரி நடைபெறும். விழா ஏற்பாடுகளை மாவடிபண்னை ஊர்பொதுமக்கள் செய்துவருகின்றனர்.