மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில்கொடைவிழாவில் அம்மன் சப்பர வீதி உலா
மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் கொடைவிழாவில் அம்மன் சப்பர வீதி உலா நடந்தது.
தென்திருப்பேரை:
மாவடிபண்ணை கிராமத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று வில்லிசை நிகழ்ச்சியும், மறுநாள் மேள வாத்திய நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடைபெற்றது. அன்று காலையில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து நேர்த்திகடன் செலுத்தினர். அதைத் தொடர்ந்து திரளான பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பகல் 12 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், புஷ்ப அலங்காரத்துடன் தீப ஆராதனையும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து அம்மன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து வான வேடிக்கைகளுடன் அம்மன் நேற்று அதிகாலை ஒரு மணிக்கு முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை மாவடி பண்ணை ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்