முத்தாரம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை


முத்தாரம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 11 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-12T00:15:47+05:30)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 8 மணிக்கு கால சந்தி பூஜை, மதியம் 1 மணிக்கு உச்சி கால பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.

மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.30 மணிக்கு மாவிளக்கு பூஜை, ராக்கால பூஜை நடைபெற்றது. இதில் குலசேகரன்பட்டினம் சுற்று வட்டார பெண்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்


Next Story