அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 47.6 மில்லி மீட்டர் மழை


அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 47.6 மில்லி மீட்டர் மழை
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 47.6 மில்லி மீட்டா் மழை பெய்தது. மழையின் காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 47.6 மில்லி மீட்டா் மழை பெய்தது. மழையின் காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

பரவலாக மழை

திருவண்ணாமலை அக்னி ஸ்தலம் என்பதற்கு ஏற்ப கடந்த சில தினங்களாக அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தும் வெயில் கொளுத்தி வந்தது.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் நேற்று காலையில் இருந்து இரவு வரை வெயிலின் தாக்கம் இல்லாமல் காணப்பட்டது. ஆனால் மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை உள்பட அனேக பகுதிகளில் நேற்று இரவு 11 மணி முதல் இன்று காலை வரை தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இதனால் கோடை வெயில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழையின் காரணமாக இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் அறிவித்தார்.

மேலும் இன்று திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. தொடர்ந்து இரவு வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

ஆரணி

ஆரணி நகரிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதியிலும் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நகரில் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் புரண்டு ஓடியது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 47.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

மற்ற பகுதிகளில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஆரணி- 47.2, வெம்பாக்கம்- 40, வந்தவாசி- 38, சேத்துப்பட்டு- 29.6, கலசபாக்கம்- 27, ஜமுனாமரத்தூர்- 24, கீழ்பென்னாத்தூர்- 23.2, போளூர்- 20.8, செய்யாறு-18, திருவண்ணாமலை- 12.2, செங்கம்- 1.8.


Related Tags :
Next Story