மே தின பொதுக்கூட்டம்
ஆய்க்குடியில் அ.தி.மு.க. சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது.
தென்காசி
கடையநல்லூர்:
தென்காசி வடக்கு மாவட்டம் செங்கோட்டை ஒன்றியம் ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் சண்முகபிரியா, மாவட்ட துணை செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன், பொருளாளர் சண்முகையா உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கொள்கை பரப்பு துணைச்செயலாளரும், முன்னாள் நெல்லை மாவட்ட செயலாளருமான பாப்புலர் முத்தையா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story