தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், அன்பும் அமைதியும் நிலவி நலமும் வளமும் பெருக வேண்டும் - டிடிவி தினகரன் பொங்கல் வாழ்த்து


தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், அன்பும் அமைதியும் நிலவி நலமும் வளமும் பெருக வேண்டும் - டிடிவி தினகரன் பொங்கல் வாழ்த்து
x

கோப்புப்படம்

விவசாய பெருங்குடிகளின் நலனை பேணிக் காத்திடவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் இறைவனை பிரார்த்தனை செய்வோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகெங்கும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ இன்னல்களை சந்தித்த போதிலும் உலகுக்கே உணவளிப்பதை முதன்மை பணியாக செய்து கொண்டிருக்கும் உழவர் பெருமக்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வாய்ப்பாக பொங்கல் திருநாள் அமைந்திருக்கிறது.

இயற்கையையும் உழைப்பையும் போற்றும் உழவர் திருநாளில், நிலத்தை உழுவதில் தொடங்கி சாகுபடி செய்யும் வரை இரவு பகல் பாராது அரும்பாடுபட்டு உழைக்கும் விவசாய பெருங்குடிகளின் நலனை பேணிக் காத்திடவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

அறுவடைத் திருநாளாம் இந்த பொங்கல் திருநாளில் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், அன்பும் அமைதியும் நிலவி நலமும் வளமும் பெருக வேண்டும் என வாழ்த்தி மீண்டும் ஒரு முறை எனது உள்ளம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story