விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும் - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து


விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும் - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 2 Feb 2024 5:01 PM IST (Updated: 2 Feb 2024 5:35 PM IST)
t-max-icont-min-icon

அரசியலுக்கு வர முடிவு எடுத்துள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

அரசியலில் திரைப்பட நடிகர்கள் பல ஆண்டுகாலமாக கோலோச்சி வருகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற தலைவர்களைத் தொடர்ந்து, சரத்குமார், கருணாஸ் உள்ளிட்டோரும் தனித்தனியாக அரசியல் கட்சிகளைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியிருக்கிறார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

விஜய் அரசியல் கட்சித் தொடங்குவது என்பது பல காலமாக பேசப்பட்டு வந்தாலும், இன்று அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தநிலையில் சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும். புதிய கட்சியை தொடங்கிய விஜய்க்கு எனது பாராட்டு. இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமை உள்ளது என்றார்.


Related Tags :
Next Story