மாயனூர் ரெயில்வே கேட் 2 மணி நேரம் மூடல்
பராமரிப்பு பணிக்காக மாயனூர் ரெயில்வே கேட் 2 மணி நேரம் மூடபட்டது.
கரூர்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனூர் காவிரி கதவணைக்கு செல்லும் வழியில் ெரயில்வே கேட் அமைந்துள்ளது. இங்கு ெரயில் வரும்போது கேட் மூடி, பின்னர் திறப்பது வழக்கமாகும். இந்தநிலையில் நேற்று மாயனூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.
இதன் காரணமாக மாயனூர் ெரயில்வே கேட் நேற்று மதியம் 1 மணி முதல் 3 மணி வரைசுமார் 2 மணி நேரம் மூடப்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். அவசர வேலையாக சென்றவர்கள் மாற்றுப்பாதையில் சென்றனர். பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு ரெயில்வே கேட் திறந்து விடப்பட்டது.
Related Tags :
Next Story