மயிலாடுதுறை நகரசபை கூட்டம்


மயிலாடுதுறை நகரசபை கூட்டம்
x

மயிலாடுதுறை நகரசபை கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகரசபை கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

இலக்கியா(தி.மு.க.): எனது வார்டில் பன்றி தொல்லை அதிகமாக உள்ளது.

ஜெயலட்சுமி (தி.மு.க.): எனது வார்டில் பொது நிதியிலிருந்து எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

ரஜினி (தி.மு.க.): ரயிலடி மேம்பாலம் மற்றும் அனைத்து தெருக்களிலும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

சுதா (தி.மு.க.): ரயிலடி வியாபார தெரு சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது.

வடிகால்களை தூர்வார வேண்டும்

ரமேஷ் (தி.மு.க.): வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே மழைநீர் தேங்கியுள்ளது. எனவே கால்டெக்ஸ் பகுதியில் இருந்து வடிகால்களை தூர்வார வேண்டும்.

சம்பத் (தி.மு.க.): கூறைநாடு ஹாஜியார் நகர் பூங்காவை மேம்படுத்த வேண்டும். நகரில் உள்ள குண்டும்-குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும்.

உஷாராணி (தி.மு.க.): புதுத்தெரு பஜனைமட சந்திப்பில் சாலை மிகவும் மோசமாக உள்ளது.

ரத்தினவேல் (தி.மு.க.): நகரில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

சுற்றித்திரியும் மாடுகள்

தலைவர்: போக்குவரத்துக்கு இடையூறாக நகரில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதோடு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கீதா (தி.மு.க.): ராஜன்தோட்டம் அருகில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் குழந்தைகள் அமரும் இடத்திற்கு அருகில் சத்துமாவு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதனை இடமாற்றம் செய்ய வேண்டும்.

தனலட்சுமி (அ.தி.மு.க.): அண்ணா நகரில் கடந்த 20 நாட்களாக குப்பை வண்டிகள் வரவில்லை.

நாய்கள்

காந்தி (பா.ம.க): கல்லூரி மாணவிகள் 4 பேரை தெரு நாய் கடித்துள்ளது. எனவே நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருப்பவருக்கு வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும்.

கணேசன் (ம.தி.மு.க.): நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் விளம்பர தட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்யாணி ரகு (தி.மு.க.): திருவிழந்தூர் அம்பேத்கர் நகர் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.

ஜெயந்தி (அ.தி.மு.க.): தீபாய்ந்த அம்மன் கோவில் அருகே உள்ள மினி குடிநீர் தொட்டியின் மோட்டார் காணாமல் போய்விட்டது.

இவ்வாறு கவுன்சிலர்கள் கூறினர்.

முடிவில் நகரசபை துணைத்தலைவர் சிவகுமார் நன்றி கூறினார்.


Next Story