தூத்துக்குடி மாநகராட்சியில்ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மேயர் ஆய்வு


தூத்துக்குடி மாநகராட்சியில்ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மேயர் ஆய்வு
x

தூத்துக்குடி மாநகராட்சியில்ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய் மற்றும் சாலை பணிகள் நடந்து வருகிறது.

கடந்த காலங்களை போல் இல்லாமல் இந்த முறை நகருக்குள் முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி பண்டுக்கரை சாலையில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலைப்பணிகளையும், கருத்த பாலம் அருகில் புதிய கான்க்ரீட் சாலை மற்றும் பாதாளச் சாக்கடை பணிகளையும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, பணிகளை மழைக்காலத்துக்கு முன்பு விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்தாரர்களை அறிவுறுத்தினார்.

கலந்து கொண்டவர்கள்

ஆய்வின் போது, மாநகராட்சி உதவி பொறியாளர் காந்திமதி, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் வான்மதி, மாநகராட்சி கவுன்சிலர் பொன்னப்பன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story