சென்னை முகலிவாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேயர் பிரியா ஆய்வு


சென்னை முகலிவாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேயர் பிரியா ஆய்வு
x

சென்னை முகலிவாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை அமைச்சர்கள் நாள்தோறும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வடசென்னையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் கூறியதாவது,எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும் சென்னை மாநகராட்சியும் தயார் நிலையில் உள்ளது என்றார்.

இந்நிலையில், சென்னை, முகலிவாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் மேயர் பிரியா கேட்டறிந்தார்.


Next Story