திருவொற்றியூரில் 'மக்களை தேடி மேயர்' திட்டம் பொதுமக்களிடம் மேயர் பிரியா 235 மனுக்களை பெற்றார்


திருவொற்றியூரில் மக்களை தேடி மேயர் திட்டம் பொதுமக்களிடம் மேயர் பிரியா 235 மனுக்களை பெற்றார்
x
சென்னை

திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை தீர்க்கும் வகையில் 'மக்களை தேடி மேயர்' திட்டத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை நேரடியாக பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறார்.

அதன்படி இதுவரை ராயபுரம், திரு.வி.க.நகர், அடையாறு மண்டலத்தில் பொதுமக்களிடம் இருந்து 889 மனுக்கள் பெறப்பட்டு அதில் 720 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 4-வது முறையாக நேற்று திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் மேயர் பிரியா பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகளிடம் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து மனுக்களை பெற்று கொண்டார். பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 235 மனுக்களை மேயர் பிரியா பெற்றுக்கொண்டார் உடனடியாக அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து, பொதுமக்களின் குறைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் 3 பெண்களுக்கு தையல் எந்திரம், விபத்து காப்பீட்டு நிதி, மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களையும் மேயர் பிரியா வழங்கினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், துணை மேயர் மகேஷ்குமார், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story