ம.தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் நியமனம்
ம.தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் நியமனம் செய்யப்பட்டார். அவர்களுக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை
குத்தாலம்:
ம.தி.மு.க. ஐந்தாவது அமைப்பு தேர்தலில் மாநில இளைஞரணி செயலாளராக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்தவர் ஆசைதம்பி ஒருமனதாக தலைமை கழகத்தால் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஒப்புதலோடு தலைமை நிலைய செயலாளர் துரை.வைகோ வழிகாட்டுதலின்படி மீண்டும் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டார். முதுகலை பட்டதாரியான இவர் ம.தி.மு.க.வில் மாவட்ட மாணவரணி அமைப்பாளராகவும், மாநில மாணவரணி துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து தற்போது மீண்டும் மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன், மயிலாடுதுறை ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story