ம.தி.மு.க ஆலோசனை கூட்டம்


ம.தி.மு.க ஆலோசனை கூட்டம்
x

ம.தி.மு.க‌ ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கரூர்

குளித்தலையில் ம.தி.மு.க. கட்சியின் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் நகர செயலாளர் சிவேஷ்வர்சன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மதுரையில் வருகிற 15-ந்தேதி நடைபெறவுள்ள பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 5 வாகனங்களில் கட்சி நிர்வாகிகள் மாநாட்டில் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story