அண்ணா சிலைக்கு ம.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை


அண்ணா சிலைக்கு ம.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
x

நெல்லையில் அண்ணா சிலைக்கு ம.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருநெல்வேலி

ம.தி.மு.க. 30-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாநகர மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் தலைமையில் ம.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் சட்டத்துறை செயலாளர் அரசு அமல்ராஜ், துணை செயலாளர் சுதர்சன், மாவட்ட துணை செயலாளர்கள் மணப்படை மணி, செல்லமுத்து, பொருளாளர் டேனியல் ஆபிரகாம், கொள்கை விளக்க அணி அபுபக்கர், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான், தேர்தல் பணிக்குழு விஜயகுமார் பாக்கியம், டாக்டர் சுந்தரலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து தச்சநல்லூர், டவுன் உள்பட பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றி, அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


Related Tags :
Next Story