ம.தி.மு.க. மத்திய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு
நெல்லையில் ம.தி.மு.க. மத்திய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
நெல்லை மத்திய மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் தேர்வு நேற்று புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது. தலைமை கழகம் சார்பில் தேர்தல் ஆணையாளராக, முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினார்.
இதில் 11 பதவிகளுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதற்கு தலா ஒருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் அவைத்தலைவராக செல்வம், மாவட்ட செயலாளராக கே.எம்.ஏ.நிஜாம், பொருளாளராக டேனியல் ஆபிரகாம், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக அரசி மாரியப்பன், மாவட்ட துணை செயலாளர்களாக செல்லமுத்து, மணப்படை மணி, நடராஜன், ஆஷிகா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களாக சுந்தரலிங்கம், ஆறுமுகபாண்டியன், ஜான்கென்னடி ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
இதில் சட்டத்துறை செயலாளர் அரசு அமல்ராஜ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கல்லத்தியான், ராதாசங்கர், பகுதி செயலாளர் ஆட்டோ பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.