அம்மை நோய் தாக்குதல் எதிரொலி:பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது-நோயை கட்டுப்படுத்த வியாபாரிகள் வலியுறுத்தல்


அம்மை நோய் தாக்குதல் எதிரொலி:பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது-நோயை கட்டுப்படுத்த வியாபாரிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:30 AM IST (Updated: 11 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

அம்மை நோய் தாக்குதல் காரணமாக பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது. இதற்கிடையில் நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ள

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

அம்மை நோய் தாக்குதல் காரணமாக பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது. இதற்கிடையில் நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மாடுகள் வரத்து குறைந்தது

பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாட்டு சந்தை நடைபெற்றது. சந்தைக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

சந்தையில் இருந்து மாடுகளை வாங்குவதற்கு கேரள வியாபாரிகள் அதிகமாக வந்திருந்தனர். மேலும் உள்ளூர் விவசாயிகளும் மாடுகளை வாங்குவதற்கு வந்தனர். இதற்கிடையில் அம்மை நோய் தாக்குதல் காரணமாக மாடுகள் வரத்து குறைந்தது. இதன் காரணமாக விற்பனையும் மந்தமானது. இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறியதாவது:-

நோயை கட்டுப்படுத்த வேண்டும்

பொள்ளாச்சி சந்தைக்கு வழக்கமாக 2500 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படும். மேலும் பொங்கல் பண்டிகையின் போது மாடுகளுக்கு தோட்டங்களில் பூஜை செய்வது வழக்கம். இதன் காரணமாக பொங்கல் பண்டிகை காலங்களில் மாடுகள் வரத்து குறைவாக இருக்கும். இதற்கிடையில் பொள்ளாச்சி பகுதிகளில் தற்போது அம்மை நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவும் மேலும் வரத்து குறைந்து உள்ளது.

மேலும் நோய் தாக்குதலால் மாடுகள் விற்பனையும் குறைந்து உள்ளது. காங்கயம் காளை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், பசு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும், மொரா ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், செர்சி ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. எனவே அதிகாரிகள் அம்மை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது மாடுகள் வரத்து மற்றும் விற்பனை அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story