கோமாரி நோய் தடுப்பூசி முகாம் மதுரையில் இன்று தொடக்கம்
விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
மதுரை,
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள 3 மாத வயதிற்கு மேற்பட்ட கன்று, பசுக்களுக்கு நவ., 6 (இன்று) முதல் முகாம் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுவதாக மண்டல இணை இயக்குநர் நடராஜகுமார் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது; மதுரையில் 3 மாத வயதுக்கு மேற்பட்ட 2 லட்சத்து 8 ஆயிரத்து 50 கன்று, பசுக்கள் உள்ளன. இந்த சீசனில் பசுக்களின் வாய், குளம்பு பகுதியில் புண்கள் ஏற்பட்டு கோமாரி நோய் தாக்குதலுக்கு ஆளாகும். இதை தவிர்க்க அனைத்து கிராமங்களிலும் நவ. 6 முதல் 27 வரை தடுப்பூசி முகாம் நடக்கிறது. விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.
Related Tags :
Next Story