கோதுமை விலையை குறைக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்


கோதுமை விலையை குறைக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்
x

கோதுமை விலையை குறைக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து வணிக வட்டாரத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

கோதுமை விலையை குறைக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து வணிக வட்டாரத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோதுமை கொள்முதல்

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-

கடந்த 17 ஆண்டுகளில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே கோதுமை கொள்முதல் இருந்து வருவதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் கோதுமை உற்பத்தியின் அதிகபட்ச அளவு 21.29 மில்லியன் டன்னாக இருந்துள்ளது.

இந்த ஆண்டும் 2022-23-ல் மதிப்பிடப்பட்ட கோதுமை சாகுபடி உற்பத்தி 112.24 மில்லியன் டன்னாக உள்ள நிலையில் ஜூன், ஜூலை மாதங்களில் உற்பத்தி 19 சதவீதமாக இருந்துள்ளது.

வினியோகத்தில் பாதிப்பு

தற்போது நாடு முழுவதும் உள்ள விவசாய விளை பொருள் சந்தைப்படுத்துதல் குழு, கோதுமை வரத்து கடந்த 17 ஆண்டுகள் ஏறக்குறைய இதே நிலைதான் இருந்துள்ளது என உறுதிப்படுத்தி உள்ளது.

மத்திய அரசு வணிகர்கள், பெரிய விவசாயிகள் தங்களிடம் இருப்பு வைத்திருப்பதனாலேயே கோதுமை வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. கடந்த 2022 மார்ச் முதல் ஜூலை வரை கோதுமை வரத்து 20.9 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. 2023-ம் ஆண்டில் அரசாங்கத்தின் கோதுமை கொள்முதல் முந்தைய ஆண்டை காட்டிலும் 5 மில்லியன் டன் அதிகமாக இருந்துள்ளது. அதேசமயம் உற்பத்தியும் 5 மில்லியன் டன் அதிகமாக இருந்துள்ளது.

ஆதார விலை

எனவே கிட்டங்கிகளில் கூடுதலாக 3 மில்லியன் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 தவிர தொடர்ந்து சில ஆண்டுகளில் கோதுமையின் வருடாந்திர சராசரி சில்லரை விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வுடன் ஒத்துப்போவதாகவே உள்ளது. மேலும் கோதுமை விலையை குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிடப்படும் நிலையில் உற்பத்தி அதிகமாக இல்லாத நிலையில் இந்த நடவடிக்கைக்கு தேவை இருக்காது.

இவ்வாறு வணிகர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story