ஆனைக்கட்டி சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
வனவிலங்குகள் உயிரிழப்பதை தடுக்க ஆனைக்கட்டி சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு வனத்துறை பரிந்துரை செய்துள்ளது.
வனவிலங்குகள் உயிரிழப்பதை தடுக்க ஆனைக்கட்டி சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு வனத்துறை பரிந்துரை செய்துள்ளது.
காட்டெருமை பலி
கோவையை அடுத்த ஆனைக்கட்டி வனப்பகுதியில் காட்டு யானை, காட்டெருமை, சிறுத்தைகள், கரடி, புள்ளிமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளும், பறவைகள் மற்றும் பட்டாம் பூச்சிகள் உள்ளிட்டவையும் வாழ்ந்து வருகின்றன. பசுமை சூழ்ந்த இந்த வனப்பகுதியில் சுற்றுலா மையங்கள் உள்ளன.
கேரள எல்லைப்பகுதியான ஆனைக்கட்டிக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி ஆனைக்கட்டி சாலையில், சலீம்அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் அருகே ஒரு லாரி மோதி காட்டெருமை பலியானது. மற்றொரு காட்டெருமை காயத்துடன் உயிர் தப்பி வனத்துக்குள் ஓடி விட்டது.
வனத்துறை எச்சரிக்கை
லாரி அதிவேகமாக சென்றதால் விபத்து நடைபெற்றதாக 1972-ம் ஆண்டு வனச்சட்டப்படி லாரி டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விபத்து முதல் சம்பவம் அல்ல. ஏற்கனவே இந்த சாலையில் பல வன விலங்கு கள் அடிபட்டு இறந்தன.
மேலும் இந்த சாலைகளை காட்டு யானைகள் அடிக்கடி கடந்து செல்வதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உஷாராக இருக்குமாறு வனத்துறையும் எச்சரித்துள்ளது.
வாகனங்களின் வேக கட்டுப்பாடு
இதையடுத்து மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ், ஆனைக்கட்டி சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். குடிபோதை மற்றும் அதிவேகமாக செல் லும் வாகனங்கள் மீது போலீசாரும் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.
ஆனைக்கட்டி சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்க ளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து உதவி வன பாதுகாப்பு அதிகாரி செந்தில்குமார் கூறியதாவது:-
பரிந்துரை
ஆனைக்கட்டி சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வனப் பகுதி இருக்கிறது. எனவே அந்த சாலையில் வாகனங்களை வாகன ஓட்டிகள் மெதுவாக ஓட்டிச்செல்ல வேண்டும். குறிப் பாக இரவில் மிகவும் மெதுவாக செல்ல வேண்டும்.
இதற்காக வேகத்தடை, எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் பட்டைகள் ஆகியவற்றை வைக்கவும் வனத்துறை சார்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது.
ஆனைக்கட்டி சாலையில் இருசக்கரம் மற்றும் கார்களில் செல்லும் சிலர் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை செல்போன் மூலம் படம்பிடிப்பது, இடையூறு ஏற்படுத்துவது மற்றும் அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அவர்களை வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.