சாலையோரங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்


சாலையோரங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாலையோரங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

கோயம்புத்தூர்

ஆனைமலை

தமிழக-கேரள எல்லையில் ஆனைமலை அருகே மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனபதி ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்குள்ள சாலையோரங்களில் கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை இரவு நேரங்களில் டிப்பர் லாரிகளில் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். மேலும் ஆனைமலை தாலுகாவில் உள்ள கோழிக்கடைக்காரர்களும் இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது,

ஆனைமலையில் இருந்து பெரியபோது செல்லும் சாலையின் இருபுறங்களிலும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. அவற்றை தெருநாய்கள் சாலை வரை இழுத்து போடுகின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இறைச்சி கழிவுகளை கொட்டும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.


Next Story