மெக்கானிக் தூக்குப்போட்டு சாவு
தூக்குப்போட்டு மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.
கரூர்
தோகைமலை தெற்கு சேனியர் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 43). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள், ஒரு மகன் உள்ளனர். கருப்பையா கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட கருப்பையா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கருப்பையாவின் தம்பி மணிவண்ணன் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story