விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அலுவலர்களுக்கு பதக்கம்
கிருஷ்ணகிரியில், பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு நிறைவையொட்டி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சுகாதார அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
கிருஷ்ணகிரியில், பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு நிறைவையொட்டி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சுகாதார அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக, பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, சென்னையில் இருந்து வரப்பெற்ற தீபச்சுடரை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பெற்று, வட்டார அளவில் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, பொது சுகாதாரத்துறையின் சார்பில் ஒவ்வொரு வட்டார அளவிலும் கடந்த 6-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளை மாவட்ட அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த 17-ந் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டு, 20-ந் தேதி வரை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து வட்டார அளவிலும் சுகாதார துறை சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
பதக்கங்கள்
பின்னர், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மருத்துவ துறையில் ஓய்வு பெற்ற மருத்துவ பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சுகாதார அலுவலர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.