தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் கம்பம் போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு


தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் கம்பம் போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு
x

தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற கம்பம் போலீஸ் ஏட்டுக்கு போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

தேனி

இந்திய மாஸ்டர் கேம்ஸ் கூட்டமைப்பு சார்பில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 18-ந் தேதி முதல் நேற்று வரை தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 12 போலீசார் கலந்து கொண்டனர்.

இதில் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தை சேர்ந்த ஏட்டு பி.மாரியப்பன் குண்டு எறிதல் போட்டியில் 2-வது இடம் பெற்று வெள்ளி பதக்கத்தையும், தட்டு எறிதல் போட்டியில் 3-வது இடம் பெற்று வெண்கல பதக்கத்தையும், சங்கிலிக்குண்டு எறிதல் போட்டியில் 3-வது இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தையும் பெற்றார். இதையடுத்து தேசிய அளவில் சாதனை படைத்த ஏட்டு மாரியப்பனை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். இதே போல் மற்ற போலீசாரும் ஏட்டு மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story