சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம்


சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம்
x

விளாத்திகுளத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் தனியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது. இதில் 2019-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் அத்திவரதர் கோவில் பாதுகாப்பு பணிக்கு சென்ற விளாத்திகுளம் சரகத்தில் 22 போலீசாருக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் வழங்கப்படும் அத்திவரதர் சிறப்பு பணி பதக்கத்தை விளாத்திகுளம் துணை சூப்பிரண்டு பிரகாஷ் வழங்கினார்.

பயிற்சியில் விளாத்திகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம், எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது, விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீஸ் அதிகாரிகள், போலீசார் என 160 பேர் கலந்துகொண்டனர்.


Next Story