கபடி போட்டியில் பதக்கம்: மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு


கபடி போட்டியில் பதக்கம்:  மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு
x

கபடி போட்டியில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்

தேனி

கோவையில் கடந்த வாரம் 18 வயதுக்கு மேற்பட்ட காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த காது கேளாத மாற்றுத்திறனாளிகள் அணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் தேனி மாவட்ட அணி வெண்கல பதக்கம் வென்றது. பதக்கம் வென்ற வீரர்களை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து கலெக்டர் முரளிதரன் நேற்று பாராட்டு தெரிவித்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story