தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
திருப்பூர்
வெள்ளகோவிலில் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் தூய்மையே சேவை இயக்கம் சார்பாக சுகாதார நிலைய மருத்துவர்களுடன் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நகர்மன்ற தலைவர் கனியரசி முத்துக்குமார் தலைமை தாங்கினார்.
நகர்மன்ற துணைத் தலைவர் விஜயலட்சுமி குமரவேல், நகராட்சி ஆணையாளர் சே.வெங்கடேஸ்வரன், வட்டார மருத்துவ அலுவலர். ராஜலட்சுமி, நகராட்சி பொறியாளர். திலீபன், 16-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கலையரசி, துப்பரவு ஆய்வாளர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர் கதிரவன், மருத்துவர் கோபிநாத் மற்றும் செவிலியர்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் முகாமில் பங்கேற்றனர்.
முகாமில் தூய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் என மொத்தம் 129 பேர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
------------------