மருத்துவ மதிப்பீட்டு முகாம்


மருத்துவ மதிப்பீட்டு முகாம்
x

வல்லத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.

தஞ்சாவூர்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் வழிகாட்டுதலின்படி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரமேஷ் ஆலோசனைப்படி தஞ்சை அருகே வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாண சுந்தரம், மாவட்ட புள்ளியியல் அலுவலர் பொற்கொடி, வட்டார கல்வி அலுவலர் சங்கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பாளர் சாந்தசீலா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 70 மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்துகொண்டனர். முகாமில் 18 பேருக்கு புதிய தேசிய அடையாள அட்டை, 10 பேருக்கு நலவாரிய பதிவு, 6 பேருக்கு உதவி உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக், வட்டார மாற்றுத்திறன் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் பலர் செய்திருந்தனர்.


Next Story