மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு சிறப்பு முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி, மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு சிறப்பு முகாம் நடக்கிறது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினையொட்டி மயிலாடுதுறை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வருகிற 29-ந் தேதியும், சீர்காழி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடுத்த மாதம் 26-ந் தேதியும் சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை தேவைப்படுவோர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் மத்திய அரசின் மூலம் வழங்கப்படுகின்ற தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு தற்போது வரை விண்ணப்பிக்காதவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் (அனைத்து பக்கங்களும்) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 1, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆகிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story