மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x

சுரண்டையில் காமராஜர் பிறந்தநாளையொட்டி மருத்துவ முகாம் நடந்தது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா, சங்க ஆண்டு விழா, பாண்டியனார் நூலக திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா சிவகுருநாதபுரம் காமராஜர் அரங்கத்தில் நடந்தது. நாடார் வாலிபர் சங்க கவுரவ தலைவர் எஸ்.வி.கணேசன் தலைமை தாங்கினார். சிவகுருநாதபுரம் இந்து நாடார் உறவின்முறை மகமை கமிட்டி டிரஸ்ட் நாட்டாண்மை எஸ்.தங்கையா நாடார் மற்றும் ஊர் கமிட்டி நிர்வாகிகள், முன்னாள் சங்க தலைவர்கள் வி.கே.எஸ். பன்னீர்செல்வம், வி.கே.ரத்தினநாடார், காமராஜர் வணிக வளாக வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.கே.எஸ் சேர்மசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் அண்ணாமலை கனி அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார், சுரண்டை பொன்ரா மருத்துவமனை டாக்டர் பொன்ராஜ், நெல்லை ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம்.முகம்மது ஷாபி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த மருத்துவ முகாமை பொன்ரா மருத்துவமனை டாக்டர் பொ.காசிராணி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நெல்லை ஷிபா மருத்துவமனை டாக்டர்கள் கலந்துகொண்டு பொது மருத்துவம், மகளிர்நலம் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்தனர். பாண்டியனார் நூலகத்தை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவ பத்மநாதன் பாண்டியனார் நூலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவ-மாணவிகள், முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக சிவகுருநாதபுரம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அங்கிருந்து விழா நடக்கும் காமராஜர் அரங்கத்திற்கு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை எஸ்.முருகன், துணைச் செயலாளர் கே.டி.பாலன், பொருளாளர் டி.ரவி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ஆர்.வி.ராமர், சி.எம்.சங்கரேஸ்வரன் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story