மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x

அம்பையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பாசமுத்திரம் பண்ணை சங்கரய்யர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் அப்பகுதி நலச்சங்கம் கட்டிடத்தில் நடத்தியது. மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர் பென் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

இதில் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் மகாதேவன், பொருளாளர் வக்கீல் மகேஷ், நிர்வாகிகள் சங்கரலிங்கம், ஜான் தாமஸ், காசிம், பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஸ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மருத்துவ முகாமினை பார்வையிட்டார். அவருக்கு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை கவுன்சிலர் மாரிமுத்து செய்திருந்தார்.


Next Story