மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x

கச்சமங்கலம் கிராமத்தில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.

தஞ்சாவூர்

பூதலூர் அருகே உள்ள கச்சமங்கலம் கிராமத்தில் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி பேசினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரம் தலைமையில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு 797 பேருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் பூதலூர் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன், கச்சமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கராஜன், சுகாதார ஆய்வாளர் ராமநாதன் மற்றும் பூதலூர் வட்டார மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story