மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x

மானூர் அருகே வடக்கு செழியநல்லூரில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே வடக்குச்செழியநல்லூரில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீ லேகா அன்பழகன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மானூர் வட்டார மருத்துவ அலுவலர் குருநாதன் வரவேற்றார். யூனியன் துணை தலைவர் கலைச்செல்வி, பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணன், மோகன்ராஜ், சுந்தரம் உள்பட சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இலவச மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசின் ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story