இலவச மருத்துவ முகாம்


இலவச மருத்துவ முகாம்
x

இலவச மருத்துவ முகாம்

திருப்பூர்

வீ.மேட்டுப்பாளையம்

வெள்ளகோவில் நகராட்சி காடையூரான்வலசில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கிவைத்தார். வெள்ளகோவில் நகராட்சி தலைவர் கனியரசி முத்துக்குமார் முன்னிலை வகித்தார். முகாமில் வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி தலைமையிலான மருத்துவ குழுவினர் முகாமுக்கு வந்த நோயாளிகளுக்கு பொதுவான நோய்கள், இதய நோய், சர்ககரை நோய், ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, கண் பரிசோதனை உட்பட 20-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்து மருத்துவ ஆலோசனைகள் மருந்துகள் வழங்கினர்.

1 More update

Related Tags :
Next Story