மக்களை தேடி மருத்துவ முகாம்
பாபநாசத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடந்தது
தஞ்சாவூர்
பாபநாசம்;
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமை பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். பேரூராட்சி கவுன்சிலர் முத்துமேரி முன்னிலை வகித்தார். முகாமில் மக்களை தேடி மருத்துவம் திட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சைகள் அளித்தனர். முகாமில் 250 பேர்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ப.ரமேஷ் நன்றி கூறினர்.
Related Tags :
Next Story