மருத்துவ முகாம்
நயினார்பத்து பஞ்சாயத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
காசநோயை ஒழிக்கும் பொருட்டு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், காசநோய் அலகு துணை இயக்குனர் சுந்தரலிங்கம் ஆகியோரின் வழிகாட்டுதலின் படியும், உடன்குடி வட்டார மருத்துவ அலுவலர் அனி பிரிமின் அறிவுறுத்தலின் பேரில் நயினார்பத்து பஞ்சாயத்தில் மருத்துவ முகாம் நடந்தது. பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய கள பணியாளர்கள் கிராமம் முழுவதும் உள்ள வீடுகளில் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு காசநோய் அறிகுறி உள்ள நபர்களை கண்டறிந்து நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தின் மூலம் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இந்த முகாமை பஞ்சாயத்து தலைவர் அமுதவல்லி திலிப் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் ஜார்ஜ் செல்வின் சகாயம் தொடங்கி வைத்தனர். முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் பார்த்திபன் வரவேற்றார். முகாமை சுகாதார ஆய்வாளர்கள் ஆழ்வார், அந்தோணி ராஜ் வழி நடத்தினர்.