வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 25 Jan 2023 12:30 AM IST (Updated: 25 Jan 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள மருதூர் தெற்கில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமை நாகை செல்வராசு எம்.பி. தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி வரவேற்றார். சுகாதார துணை இயக்குனர் விஜயகுமார், கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம்முருகையன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுரு பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சோழன், ஒன்றிய கவுன்சிலர் மாலதி துரைராசு, வக்கீல் பாரிபாலன், ஊராட்சி துணைத்தலைவர் சத்தியசீலன், சுகாதார மேற்பார்வையாளர் அன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார். இதேபோல் திட்டச்சேரியில் நடந்த வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை செல்வராசு எம்.பி. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதார துணை இயக்குனர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வல்லுனர் லியாக்கத் அலி வரவேற்றார். காசநோய் பிரிவு துணை இயக்குனர் சங்கீதா, தொழுநோய் பிரிவு துணை இயக்குனர் சங்கரி, பள்ளி தலைமை ஆசிரியர் கலாராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் நன்றி கூறினார்.


Next Story